Sunday, January 20, 2013

கலை கலாச்சாரத்தை பேணி காப்போம்; சமுதாய வளர்ச்சிக்கு பாடுபடுவோம்- சங்கர் ராஜ்



நமது கலை கலாச்சாரத்தை வளர்க்கும் கடப்பாடு இளையோர்களின் கையில் தான் இருகின்றது என்று சிலாங்கூர் மாநில இளைஞர் பகுதி தலைவர் சங்கர் ராஜ் கூறினார். ஒற்றுமை விழாவாக பொங்கள் கொண்டாடப்படுவது நமது கலாச்சாரத்தின் மாண்மை குறிப்பதாக அவர் தெரிவித்தார்.


முன்னதாக கிள்ளான் செம்பிறை சங்கம் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் நிகழ்வை அவர் துவக்கி வைத்தார். மூவின மக்களும் எந்த ஒரு பாகு பாடு இன்றி இந்த கலாச்சார நிகழ்வில் பங்கெடுத்திருந்த்தது மலேசியாவில் மட்டுமே காணப்படும் ஒருமைப்பாட்டை குறிப்பதாக அவர் தெரிவித்தார். சீனர் மற்றும் மலாய்கார இளையோர்கள் இந்திய பன்பாட்டு உடை அணிந்து நிகழ்வில் கலந்துக்கொண்டது புதிய பரிமானத்தை கொண்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்


ஒரே மலேசிய எனும் குடையின் கீழ் மூவினமும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் இந்த திருநாட்டில் சில தரப்பினர் அரசியல் இலாபத்திற்காக குழப்பங்களை உண்டாக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தார்.  கிள்ளான் செம்பிறை சங்க பொங்கள் விழா வருடாந்திர நிகழ்வாகும். இந்நிகழ்வில் திரு.சங்கர் கோத்தா ராஜா வட்டாரத்தில் உள்ள வசதி குறைந்த மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் உதவி நிதியை வழங்கினார்.


நமது கலை கலாச்சாரத்தை வளர்பது நமது கடமை; இளையோர்கள் இது போன்ற கலை கலாச்சார சார்ந்த நிகழ்வுகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



தேர்தல் களம்
 
சிலாங்கூர் மாநிலத்தை கைபற்ற தேசிய முன்னனி மற்றும் சிலாங்கூர் மாநில ம.இ.கா இளைஞர் பகுதி தயார் நிலையில் உள்ளது என்று சிலாங்கூர் மாநில இளைஞர் பகுதி தலைவர் சங்கர் ராஜ் கூறினார்.

நாடாளமன்றம் எந்த நேரத்தில் கலைக்கப்பட்டலும் தேர்தலை எதிர் கொள்ள சிலாங்கூர் மாநில ம.இ.கா இளைஞர் பகுதி தயர் ஆகி விட்டதாக அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment

How to keep your employees respectful