இந்நாட்டில் வாழும் அனைத்து இனங்களின் உரிமைகளுக்கும் அங்கீகாரமும், மரியாதையும் வழங்க வேண்டும் என பிரதமர் தம் அமைச்சரவை உறுப்பினர்களுக்கு நினைவூட்டி வருவதாக தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ ரயிஸ் யாதிம் கூறியுள்ளார்.
ஒவ்வொரு இனத்துக்கும் வரையறுக்கப்பட்டுள்ள உரிமைகளை யாரும் பறிக்க முயலக்கூடாது. ஒரு சமுதாயத்திற்கு இருக்கின்ற அடித்தளம் எவ்வகையிலும் மற்றொரு சமுதயாத்தின் வளர்ச்சிக்கு தடையாக அமையாது என்பது பிரதமரின் நினைவுட்டு என ரயிஸ் கூறினார்.
தனியார் நிறுவனங்களும் அரசு சார்பற்ற அமைப்புகளும் அரசாங்கத்தோடு இணைந்து ஆதரவற்றவர்களின் மேன்மைக்கு உதவ முன்வர வேண்டும் என பிரதமரின் அண்மைய கூற்றுக்கு கருத்துரைத்தபோது ரயிஸ் இவ்வாறு தெரிவித்தார்.
உண்டாங் ஜெலுபு இடைநிலைபள்ளியின் மண்டபத் திறப்பு விழாவின் போது உரையாற்றிய ரயிஸ், தகவல் தொழில்நுட்பத்தை சமுதாய கலாச்சாரமாக மாற்றும் நோக்கில் அரசாங்கம் வழங்கும் இலவச மடிக்கணிணிகளை எத்தரப்பும் தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும் நினைவுறுத்தினார்.
இணையத்தில் அவதூறு, ஆபாச படங்கள் போன்ற தவறான அம்சங்கள் அடங்கியிருந்தாலும் அது நம்மை ஆட்கொள்ள விட்டு விடக்கூடாது என்றும் ரயிஸ் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment