மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு மிக மெதுவாக தான் இருக்கும் என மலேசிய பொருளாதார ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. மேலும் அதன் வளர்ச்சி இந்த ஆண்டு 5.2 சதவீதமாகத்தான் இருக்கும் என அது கூறியுள்ளது.
கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டு அறிவிப்பின்போது நாட்டின் வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டது.
இது குறித்து திங் டேங் கூறுகையில் பொருளாதார மாற்று திட்டம் (Economic Transformation Programme) முழுமையாக இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றவது மிகப் பெரிய சவால் என்றார்.
நாட்டின் வட்டி விகிதம் பெரும்பாலும் நிலையாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த வருடம் தேர்தல் வரவிருப்பதால் பெரும்பாலும் மக்களுக்கு சுமை ஏற்படுத்தும் எந்த வித பொருளாதார மாற்றமும் நடக்காது என்று எதிர்பார்ப்பதாக மலேசிய பொருளாதார ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
மேலும் நூகர்வேர் விலை கடந்தாண்டு 1.7 சதவீதமாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு அது 2.8 சதவீதமாக உயரலாம். உணவு பொருட்களின் விலை ஏற்றம் 2011ல் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றும் அது கூறியுள்ளது.
No comments:
Post a Comment