Monday, January 24, 2011

இண்டர்லோக் நாவல் விவகாரத்திற்கு விரைவில் நல்ல தீர்வு : டத்தோ ஜி.பழனிவேல்


இண்டர்லோக் நாவல் விவகாரத்திற்கு விரைவில் நல்ல தீர்வு  : டத்தோ ஜி.பழனிவேல்



இண்டர்லோக் நாவல் விவகாரம் குறித்து ஒரு நல்ல தீர்வு விரைவில் எட்டப்படும் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் ம.இ.கா தேசிய தலைவர் டத்தோ ஜி.பழனிவேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  
மேலும், தான் பிரதமரிடம் இவ்விவகாரம் குறித்து தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாகவும், பிரதமரும் இது குறித்து தன்னுடன் ஆலோசித்து வருவதாகவும் கூறினார்.
ம.இ.கா தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து குரல் கொடுத்து வந்துள்ளது. இப்பிரச்சினையில் ம.இ.கா.வுடன் இணைந்து குரல் கொடுத்த அனைத்து அரசு சார்பற்ற இயக்கங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட டத்தோ ஜி.பழனிவேல் ம.இ.கா.வோடும், கல்வி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பிரதிநிதிகளுடனும் தொடர்ந்து ஒத்துழைக்குமாறு கேட்டு கொண்டார்.

No comments:

Post a Comment

How to keep your employees respectful