
பத்துமலைத் திருத்தலத்தில் இனி கேளிக்கை விளையாட்டுக்கள், பந்தயம் கட்டும் விளையாட்டுக்கள் ஆகியவற்றுக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தைப்பூசக் கொண்டாட்ட நாட்களில் குடை ராட்டினம் போன்ற சிறுவர்கள் விளையாட்டு, இளைஞர்களை ஈர்க்கும் பந்தய விளையாட்டுக்களூக்கு இந்த ஆண்டு அனுமதி உரிமம் வழங்குவதில்லை என்று செலாயாங் நகராண்மைக் கழகம் முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவு கடந்த வாரம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கான கடிதத்தை பத்துமலை கோவில் நிர்வாகத்திடம் கொடுத்துள்ளதாக செலாயாங் நகராண்மைக் கழகத்தின் உரிமம் வழங்கும் பிரிவின் இயக்குனர் முகமட் எப்பண்டி தெரித்தார். அதன் அடிப்படையில் இன்று மாலை 3.00 மணி அளவில் நகராண்மைக்கழக அதிகாரிகள் பத்துமலைத் திருத்தலத்துக்கு சென்று அனுமதி கொடுக்கப்படாத நடவடிக்கைகள் ஏதேனும் உள்ளதா என்று பார்ப்பார்கள். அனுமதி மறுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment