உத்துசான் மலேசியா பத்திரிகையில் இனத்துவேசமான செய்திகளும் கட்டுரைகளும் அதிகமாக வெளியிடப்படுகின்றன என்றும் அதற்கு அதன் ஆசிரியர்கள்தான் காரணம் என்றும் உத்துசான் மலேசியா பத்திரிகை நிருபர் ஹத்தாவ் வஹாரி தெரிவித்துள்ளார். இவர் தேசிய பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.
மேலும் நன்றாக விற்பனையாகிக் கொண்டு இருந்த உத்துசான் மலேசியாவின் விற்பனை இதன் காரணமாகத்தான் பெருமளவில் சரிந்து விட்டது என்று அவர் சொன்னார். அதனால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பாக உத்துசான் பத்திரிகை நிர்வாகம் அவர் மேல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதற்கான உள்விசாரணை ஜனவரி மாதம் 17-ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
இந்த உள்விசாரணக்கு தேசிய பத்திரிகையாளர்கள் சங்கம் கட்டணம் தெரிவித்துள்ளதோடு ஹத்தாவ் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளது.
மேலும், தேசிய பத்திரிகையாளர் சங்கம் சர்வ தேச பத்திரிகையாளர் கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்கிறது. ஆகவே சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு இந்த விவகாரத்தில் தலையிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
உத்துசான் நிருபர் கூறியது பத்திரிகை தர்மத்துக்கு உட்பட்டதுதான். எந்த ஒரு பத்திரிகையாளரும் அவர்களுடைய மனச்சாட்சிக்கு உட்பட்டு நடப்பதற்கும் பேசுவதற்கும் உரிமை உள்ளது. அதற்காக அவர்கள் மீது எந்த வகையிலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது என்று அதன் தலைவர் ஜேக்குலின் பார்க் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment