மனிதாபிமானமற்ற
முறையில் MH17 விமானத்தை சுட்டு வீழ்த்திய பயங்கரவாதிகளையும் இதற்கு உருதுணையாக இருந்தவர்களையும் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும். இந்த விபத்தை
போர் குற்றமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
298 பயணிகளை ஏற்றிக்கொண்டு மலேசியா திரும்பிக்கொண்டிருந்த மலேசியாவிற்கு சொந்தமான MH17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
எனும் செய்தி அறிந்து மனம் உடைந்துப்போனது. சபாவில் சூலு கிளர்ச்சிக்காரர்களின் ஊடுருவல், பிறகு
MH370 வானில் மாயமானது பின்னர் சபா செமாபொல்
தீவில் பயங்கரவாதிகள் ஊடுருவி சண்டையிட்ட்து என தொடர்ந்தால் போல் பல தொடர் இன்னல்கள்
நம் நாட்டிற்கு வந்தவாரு இருந்துகொண்டிருக்கும் வேளையில் இந்த MH17 விமான விபத்து அனைத்து
மலேசியர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வானில் பறந்து
கொண்டிருந்த MH17 விமானத்தை காரணமின்றி சுட்டு வீழ்த்தியவர்களின் நோக்கம் தான் என்னவாக
இருந்திருக்க கூடும். கொடூரமான முறையில் இந்த மனிதானிமானமற்ற செயலை செய்த நாசக்காரர்களை உலக நீதிமன்றத்திடம் முன் நிறுத்தி தகுந்த நீதியை வழங்க
வேண்டும்.
பலம் வாய்ந்த
நாடுகளின் சண்டையில் சிதறிப்போவது ஏனோ சிறிய நாடுகள் தான், உடனடியாக ஐ.நா போர்குற்ற
விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லையேல் இவர்களின் ஆணவதாண்டத்தில் மேலும் பல பாவ
மற்ற மக்களையும் பச்சிளங்குழந்தைகளையும் நாம் இழக்க நேரிடும். இதுவரையில் ஐ.நா அமைதியாக
இருந்தது போதும் ஒரு முறையாவது மக்களுக்காக குரல் கொடுக்கட்டும்.
No comments:
Post a Comment