Wednesday, September 5, 2012

ஒருவர் மீது பகைமை இருந்த்தாலும் இப்படி நாகரீகம் அற்ற முறையில் செயலாற்றுவது கண்டிக்க தக்கது-சங்கர் ராஜ்




 தேசிய தின கொண்டாட்டத்தின் பொழுது  பொறுப்பற்ற சிலரின் செயல் கண்டிக்க தக்க வகையில் அமைந்திருந்தது. நாட்டின் நற்ப்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் ஜாலூர் கெமிலாங்கையும் நாட்டின் தலைவரின் படத்தையும் மிதித்து அவமானப்படுத்திய செயல் மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் இம்மாதிரியான செயல் நாட்டின் மீது பற்று அற்றவர்களின் செயல் என்று சிலாங்கூர் மாநில ம.இ.கா இளைஞர் அணி தலைவர் தாக்கி பேசினார்.

சங்கர் ராஜ் அயங்கர்
நாட்டின் கொடி என்பது ஒவ்வொரு குடிமகனின் அடையாளம் ஆகும் நாட்டின் தலைவரோ மக்களின் பிரதிநிதி ஆவார். ஆனால் தேசப்பற்று அற்ற சிலர் படங்களை மிதித்து தேச நிந்த்தனை புரிந்துள்ளனர். என்னதான் ஒருவர் மீது பகைமை இருந்த்தாலும் இப்படி நாகரீகம் அற்ற முறையில் செயலாற்றுவது கண்டிக்க தக்கது என்று அவர் கூறினார்.

இந்த ஈனச்செயளை செய்தவர்கள் என்ன காரணம் கூறினாலும் செவிசாய்க்காமல் தகுந்த்த தண்டனையை வழங்க வேண்டும். இம்மதிரியான செயல் வருங்காலங்களில்  பெரிய பிரச்சனைகளாக உருவெடுக்கமல் இருக்க காவல் துறை விரைவாக புலணாய்வை தொடக்கி கடுந்தண்டனையை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முன்னதாக சிலாங்கூர் மாநில சுல்தானை பின் தள்ளி கொண்டாடப்பட சுதந்திர தின கொண்டாட்டத்தை அவர் சாடினார். சிலாங்கூர் மாநில அரசாங்கம் இம்மாதிரி செய்திருக்க கூடாது என்றும் இம்மாதிரியான செயல் வருத்ததை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.













No comments:

Post a Comment

How to keep your employees respectful