மனுகுல சீர்குழைப்பு மீதான அமரிக்கா நிறைவேற்றிய போர் குற்ற தீர்மானம் வெற்றி!


ஸ்ரீ லங்காவின் மனுகுல சீர்குழைப்பு மீதான அமரிக்கா நிறைவேற்றிய போர் குற்ற தீர்மானம் வெற்றி பெற்ற போதிலும் மலேசியாவின் நடு நிலையான முடிவு ஆதரிக்கும் வகையில் அமையவில்லை. இருந்த போதிலும் ஸ்ரீ லங்காவில் பாதிக்க பட்ட மக்களுக்கான் நியாயம் கிடைக்கும் நேரம் நெருங்கி விட்டது. இந்தியா இறுதியில் தனது முடிவை மாற்றிக்கொண்டு நீதிக்காக வக்களித்தமைக்கு எனது நன்றி.
வாக்களித்த நாடுகளுக்கு நன்றி....

இனி ஒரு புதிய அத்யாத்தை எதிர்பார்போம்!!

தீர்மானம் 9 அதிகப்படியான வாக்குளால் நிறைவேறியது

ஜெனிவா ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையானது 9 அதிகப்படியான வாக்குகளினால் நிறைவேறியயது.

இப்பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா உட்பட்ட 24 நாடுகளும் எதிராக சீனா மற்றும் ரஸ்யா உட்பட்ட 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன.

மிகுதியான 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதரவளித்த நாடுகளின் பட்டியல்

ஆஸ்திரியா, பெல்ஜியம், பெனின், கம்ரூன், சிலி, கொஸ்தாரிகா, செக் குடியரசு, குவாத்தமாலா, ஹங்கேரி, இந்தியா, இத்தாலி,லிபியா, மொரிசியஸ், நைஜீரியா, பேரு, போலந்து, மால்டோவா, ரூமேனியா,ஸ்பெயின், சுவிஸ், அமெரிக்கா, உருகுவே

எதிராக வாக்களித்த நாடுகள்

பங்களாதேஸ், சீனா, கொங்கோ, கியூபா, ஈகுவடோர், இந்தோனேசியா, குவைத், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், கட்டார், ரஸ்யா, சவுதி அரேபியா, தாய்லாந்து, உகண்டா, மௌரித்தானியா.

வாக்களிக்காத நாடுகள்

அங்கோலா, ஜோர்தான், கிர்கிஸ்தான், மலேசியா, செனிகல், புர்கினா பார்சோ, பொட்சுவானா, ஜிபூட்டி.


-இனியவன்

Comments

Popular posts from this blog

Senarai Syarikat Yang Menawarkan Tempat Untuk Latihan Industri

4 Reasons Why Sleep Deprivation Will Inhibit Your Muscle Gains

php mailer script