நான் பள்ளிக்கூடத்தில் படித்த நாட்களில் வரலாறு எப்போதும் எனது விருப்பத்துக்குரிய பாடமாக இருந்து வந்துள்ளது. நான் வரலாற்றுப் பாடத்தை நேசித்தேன். காரணம் அது ஒரு கதையைப் போன்று வாசிக்க இயலும் என்பதாகும்.
இந்தோனிசியாவிலிருந்து வந்த இந்து இளவரசர் ஒருவர் அடைக்கலம் நாடி, மலாக்காவைத் தோற்றுவித்த கதை அதுவாகும். ரத்தம் சிந்தாமல் மலாயா சுதந்திரம் பெற்ற கதை அதுவாகும். மலேசியக் கூட்டரசில் இணையுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு வற்புறுத்தப்பட்டு “ஏமாற்றப்பட்ட” கதை அதுவாகும்.
நாம் இன்று ஒரு திருப்பு முனையில் நின்று கொண்டிருக்கிறோம். நமது பள்ளிக்கூடங்களில் நமது மலேசிய வரலாறு பற்றிய பாடம் மீது விவாதம் தொடருகிறது. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. உண்மையில் அந்த விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சு மீது அவநம்பிக்கையே அதிகரித்துள்ளது.
அந்த அமைச்சுக்குப் பொறுப்பாக உள்ளவர் பெர்க்காசாவை வெளிப்படையாக ஆதரிக்கும் இனவாதியாக இருக்கும்போது நாம் என்ன கூற முடியும்?
ஒரு நாடு என்ற முறையில் 53 ஆண்டுகளைக் கடந்து வந்துள்ள நாம், நமது வரலாறு என்ன என்பதை நம்மால் முடிவு செய்ய இயலாவிட்டால், நமது மூதாதையர்கள் கனவு கண்ட நாடாக வாழ்வதில் நாம் படுதோல்வி அடைந்து விட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.
உண்மையைக் கண்டுபிடித்துச் சொல்வதே வரலாறு என நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். சில வேளைகளில் உண்மை குறிப்பாக அதிகார வர்க்கத்திற்கு கசப்பாக இருக்கலாம்.
நமது அரசியல்வாதிகள் அந்த ஆய்வை ஒப்புக் கொண்டு பள்ளிக்கூடங்களில் உள்ள நமது இளம் தலைமுறையினருக்கு அனைத்தையும் துணிச்சலாக எடுத்துரைப்பார்களா?
அவர்களுக்கு அந்தத் துணிச்சல் இல்லை என்பதில் எனக்கு கிஞ்சித்தும் சந்தேகம் இல்லை. காரணம் அவர்கள் தங்களது சொந்த உலகக் கண்ணோட்டத்துக்கு மாறுபாடான எந்தக் கருத்தையும் சகித்துக் கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இல்லை.
எடுத்துக்காட்டுக்கு மகாதீரை பற்றி நினைத்துப் பாருங்கள். அவர், தாம் நிர்வாகச் செய்த காலத்தில் மாற்றுக் கருத்துக்களைச் சகித்து கொள்ளவே மாட்டார்.
அந்த அரசியல்வாதி அல்லது அவரது கட்சிக்கு முரண்பாடான எந்தக் கருத்தும் தேச நிந்தனை அல்லது அபாயகரமானவை என்று கருதப்பட்டது. அத்தகைய கருத்துக்களைத் தெரிவித்தவர்கள், துரோகிகள், விசுவாசமில்லாதவர்கள் அல்லது அது போன்ற சொற்களால் முத்திரை குத்தப்பட்டனர்.
“கடந்த காலத்தை நினைவில் கொள்ளாதவர்கள் அதனைத் திரும்பத் திரும்ப எழுத வேண்டியிருக்கும்”, என ஜார்ஜ் சந்தயானா என்பவர் ஒரு முறை கூறியிருக்கிறார்.
கடந்த 53 ஆண்டுகளாக நாடு, ஒரே அரசாங்கம் என்ற பாவத்தை எவ்வித பிழையும் இல்லாமல் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருக்கிறது. 1969ம் ஆண்டு தொடக்கம் நாம் உண்மையில் நமது களங்கமான கடந்த காலத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ள கொள்ளவில்லை.
ஏன்? நாம் நமது மலேசிய வரலாற்றின் இருண்ட பகுதியை மட்டுமே கற்றுக் கொள்வதற்கு தள்ளப்பட்டோம். மலாய்க்காரர் அல்லாதாருக்கு மே 13ஐ நினைவுபடுத்துவதற்கு நமது அரசியல்வாதிகள் இன்று வரை தயங்கியது இல்லை.
மே 13க்குப் பின்னர் சிலாங்கூரில் கம்போங் மேடான், பினாங்கில் கம்போங் ராவா ஆகிய இடங்களில் அதுவும் 1990களில் மற்ற இனக் கலவரங்கள் நிகழ்ந்துள்ளன என்பதைக் கூறுவது வருத்தமாக இருக்கிறது.
“மக்களே, நாம் ஏதாவது பாடம் கற்றுக் கொண்டோமா?”
நாம் கடந்த காலம் மீண்டு வந்து நம்மைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையுடன் கடந்த காலத்தில் வாழ விரும்பும் மக்கள் (அம்னோ/பிஎன் என வாசிக்கவும்) ஆவர்.”
நமது நாட்டின் வரலாறு என்ன என்பதை அறிய நாம் நமது அடித்தளங்களுக்கு மீண்டும் செல்ல வேண்டும். துங்கு காலம் தொட்டு ஹுசேன் ஒன் காலம் வரையில் நிலவிய நல்ல, நல்ல கடந்த காலத்தையும் நாம் மறந்து விடக் கூடாது. கொடுங்கோலன் மகாதீர் வரும் வரையில் அந்த நாட்கள் தேசிய ஒற்றுமைக்கு மிகச் சிறந்த காலமாகத் திகழ்ந்தன.
பல்வேறு ஊழல்களினால் மாசு படிந்துள்ள அந்த பிஎன் அரசியல்வாதிகளின் கரங்களிலிருந்து நாடு என்னும் முறையில் நமது வரலாற்றை நாம் மீட்க வேண்டிய அவசியம் உள்ளது. நமது தேசியக் கருவூலத்தை அந்த கோமாளிகள் கூட்டத்டை நம்பி ஒப்படைக்க வேண்டுமா? இன்றையத் தினத்தில் அந்தப் பகற்கொள்ளையர்கள் மேலோங்கி இருப்பதாக நான் அஞ்சுகிறேன்.
நாம் விழித்துக் கொண்டு “இறுதி இறுதியாக” அவர்களை வரலாறாக மாற்றுவோம்
No comments:
Post a Comment