Wednesday, April 6, 2011

லின்கண் கல்லூரியின் முதல்வர் DATUK DR. HAJH BIBI FLORINA முன் நிலையில் சிலாங்கூர் மாநில இளைஞர் அணி தலைவர் திரு.சங்கர் ராஜ் ஐயங்கர் அவர்கள் கையொப்பமிட்டார்.

இன்று சிலாங்கூர் மாநில இளைஞர் பிரிவு லின்கண் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது. லின்கண் கல்லூரியின் முதல்வர் DATUK DR. HAJH BIBI FLORINA முன் நிலையில் சிலாங்கூர் மாநில இளைஞர் அணி தலைவர் திரு.சங்கர் ராஜ் ஐயங்கர் அவர்கள் கையொப்பமிட்டார். சிலாங்கூர் மாநில இளைஞர் அணியின் முயற்சியில் சிறப்பு தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் ரிங்கிட் மலேசியா 5 மில்லியனை கல்வி உபகாரச்சம்பளம் வழங்க முன் வந்துள்ளனர்.
இக்கல்லூரியில் கல்வி கற்க விருக்கும் மாணவர்கள் தொடக்க கட்டணம் எதையும் செலுத்த தேவையில்லை என்றும் அவர்களுக்கு ptptn கல்வி கடனுதவி கிடைக்கும் வரை கல்லூரி  அவர்களுக்கு மாதம் RM 300 வெள்ளி உதவி தொகையாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தாதிமை துறை, FARMASI, கணினி துறை, HOTEL MANAGEMENT, CULINARY போன்ற பல  துறைகளில் லின்கண் கல்லூரி சிறந்த கல்வி தரத்தையும் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களையும் கொண்டுள்ளது, படித்து முடிதவுடன் வேலை வாய்ப்பும் கல்லூரியே ஏற்பாடு செய்து தருகிண்றது நமது இந்திய மாணவர்கள்  இந்த வாய்ப்பை சிறப்பான முறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று திரு.சங்கர் ராஜ் ஐயங்கர் மேலும் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment

How to keep your employees respectful