Tuesday, March 22, 2011

எஸ்டிபிஎம் கல்வியை தொடருங்கள் - இந்திய மாணவர்களுக்கு அறிவுறுத்து

பல்கலைக்கழகத்தில் இலகுவாக நுழைய வேண்டுமா? அப்படி என்றால் இந்திய மாணவர்கள் எஸ்டிபிஎம் கல்வியைத் தொடர்வதற்கு ஆர்வம் காட்ட வேண்டும். பெரும்பாலான இந்திய மாணவர்கள் எஸ்டிபிஎம் பாடத்தை எடுப்பதற்கு தயக்கம் காட்டுகிறார்கள்.
இதனால் அவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை இழக்கின்றனர் என ம.இ.கா உயர்கல்விக் குழுவின் தலைவர் மகாகணபதி தாஸ் தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சரிவு கண்டுள்ளது. இதற்கு பெரும்பாலான மாணவர்கள் எஸ்டிபிஎம் எடுக்காததும் காரணம் எனக் கூறப்படுகிறது. அரசு பொது உயர்கல்வி கூடங்களில் நுழைவதற்கு மூன்று வழிவகைகள் உள்ளன.
 அவர்கள் மெட்ரிகுலேசன், போலிதெக்னிக், எஸ்டிபிஎம் ஆகிய வழிகளில் பல்கலைகழகப் பட்டப்படிப்பைத் தொடரலாம். எஸ்டிபிஎம் கல்வியைத் தவிர இதர கல்வித் துறைகளில் மாணவர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு உண்டு. ஆனால் எஸ்டிபிஎம் அப்படி அல்ல. குறைந்த செலவில் அவர்கள் இந்த கல்வியை பயின்று முடிப்பதோடு பொது பல்கலைகழங்களில் பட்டப்படிப்பையும் தொடர்வதற்கான வாய்ப்பையும் பெறுகின்றனர் என்றார் அவர். ஆகையால் இந்திய மாணவர்கள் எஸ்டிபிஎம் கல்வியைத் தொடர முன்வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இன்று ம.இ.கா தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

How to keep your employees respectful