2011 மற்றும் 2012ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுபல்கலைக்கழக நுழைவுக்கு இணையம் வழி விண்ணப்பம் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. இவ்வாண்டுக்கான விண்ணப்பம் முறைமை பலவகையிலும் மாற்றம் கண்டுள்ளதை மாணவர்கள் கருத்தில் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இம்முறை எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்கள் மட்டுமல்லாது தொழில்திறன் பயிற்சி கல்லூரிகளிலும் பயில நினைக்கும் மாணவர்களும் இணையம் வழியே விண்ணப்ப வேண்டும் என்ற புதிய நிபந்தனை உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் http://upu.mohe.gov.my என்ற அகப்பக்கத்தின் வழி தங்களின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த இணைய முறைமைக்குள் செல்வதற்கு மாணவர்கள் அதற்குண்டான பிரத்தியேக குறிப்பு எண்ணைக் கொண்டிருக்க வேண்டும். இதனை அவர்கள் BSN வங்கிகளில் ரிம. 10.60 க்கு பெற்றுக் கொள்ளலாம்.
எஸ்டிபிஎம் மாணவர்கள் இந்த எண்ணை வாங்கும்போது மாணவர்கள் IPTA எனப்படும் பொதுப்பல்கலைக்கழகத்திற்கான விண்ணப்ப எண் என்று கூறி வாங்கிக் கொள்ள வேண்டியவது. தொழில்திறன் பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் SKM (SIJIL KEMAHIRAN MAHIR) குறிப்பு எண் என கேட்டு வாங்க வேண்டும். தவறான குறிப்பு எண்ணை வாங்குவதை தவிர்க்குமாறு மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மாணவர்கள் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதிவரையில் மட்டுமே இந்த எண்ணை வாங்க முடியும். இதுபற்றிய மேல்விவரங்களுக்கும் உதவிகளுக்கும் 03-888 35801 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:
Post a Comment