Wednesday, December 8, 2010

இந்தியர்களின் குடியுரிமைப் பிரச்சினைக்கு அடுத்த ஆண்டுக்குள் தீர்வு - டத்தோ டாக்டர் சுப்பிரமணியம்

இந்திய சமுதாயத்தில் தீர்க்கப்படாமல் இருக்கின்ற குடியுரிமைப் பிரச்சினைகளுக்கும் சமூக நல விவகாரங்களுக்கும் அடுத்த வருட இறுதிக்குள் தீர்வு காணப்படும்.











இந்திய சமுதாயத்தில் தீர்க்கப்படாமல் இருக்கின்ற குடியுரிமைப் பிரச்சினைகளுக்கும் சமூக நல விவகாரங்களுக்கும் அடுத்த வருட இறுதிக்குள் தீர்வு காணப்படும் என மனித வள அமைச்சர் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் கூறினார்.



சிலாங்கூர் , பினாங்கு ஜொகூர், பேராக் ஆகிய மாநிலங்களில் பிரச்சினைக்குரிய 20 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கு நிலவும் இந்தியர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சிறப்புக் குழு அமைப்பட்டு வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.



இந்த நடவடிக்கை நாட்டில் உள்ள இந்தியர்களின் வறுமையைக் குறைக்க உதவும் என்று குறிப்பிட்டார்.



இதனிடையே, இந்த ஆண்டு மத்திய பகுதிக்குள் 4948 பேரின் குடியுரிமை பிரச்சினையில் 35 சதவிகிதம் தீர்வுகாணப்பட்டுள்ளது என்று டத்தோ சுப்பிரமணியம் கூறினார்.



இந்த சிறப்புக் குழுவுக்கு டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் தலைவராக பொறுப்பு ஏற்றுள்ளார். இந்த சிறப்புக் குழு 11 இயக்கங்களோடு இணைந்து இந்திய சமுதாயத்தினர் எப்படி வாழ்க்கையில் முன்னேறுவது, வருமானத்தை ஈட்டுவது என்பதை மக்களுக்கு கற்றுக் கொடுக்கும்.



அது மட்டுமல்லாமல் இந்த சிறப்புக் குழு, வேலைவாய்ப்பு, சிறுகடன் உதவி, பயிற்சிப்பட்டறை போன்றவை குறித்து எடுத்துரைத்து இந்திய மக்கள் முன்னேற்றத்துக்கு உதவும்

No comments:

Post a Comment

How to keep your employees respectful