Wednesday, June 20, 2012

மலேசிய இந்தியர்கள் ஒதுக்கப்படவில்லை? KAUM INDIA DI MALAYSIA TIDAK DIPINGGIRKAN? 2012

1. சிறு – நடுத்தர இந்திய வணிகர்களின் வியாபார விரிவாக்கத்திற்கு வெ. 15 கோடி கடனுதவி ஒதுக்கீடு.

2. இளைய இந்திய வியாபாரிகளுக்காக வெ. 3 கோடி தெக்குன் கடனுதவி ஒதுக்கீடு.

3. கஸானா நேஷனல், பிஎன்பி நிறுவனங்களின் மூலம் அரசாங்க – அரசாங்க சார்புடைய நிறுவனங்களின் ‘டெண்டர்கள்’ இந்திய குத்தகையாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.

4. திவாலான இந்தியர்களின் நிதி நிலைமையை சீர் செய்ய பேங்க் நெகாரா, ஏகேபிகே (AKPK) துணையுடன் நாடு முழுவதும் சூறாவளி பயணம்.
இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோலும் வகையில், ‘மலேசிய இந்திய பொருளாதார மாநாடு’ மைன்ஸ் மாநாட்டு அரங்கத்தில் இன்றிரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற பிரதமர் நஜீப் துன் ரசாக், இந்தியர்களின் பொருளாதார உயர்வுக்கு வித்திடும் அபரிமித திட்டங்களை அறிவித்தார். அதன் விவரம் பின்வருமாறு:-
“இந்தியர்கள் பலர் திவால் ஆவதும், அவர்களின் சொத்துகள் ஏலம் விடப்பட்டு வங்கிகள் அவர்களை ‘கருப்பு’ பட்டியலிடுவதும், பரவலாக நிகழ்ந்து வருவதை அறிந்துக் கொண்டேன். இந்திய மக்கள் பலர் இது குறித்து தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். மலேசிய இந்திய பொருளாதார மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவினர், கடந்த வாரம் என்னிடம் சமர்ப்பித்த நகல்திட்டத்தின் வழி இவ்விவரங்களை நான் தெரிந்துக் கொண்டேன்.”
இந்தியர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வங்கிக் கடனுதவிகள், கிடைப்பதில்லை என்ற குறைபாடும் வெளியாகியுள்ளது. அதே வேளையில், பல அரசாங்க மற்றும் அரசு சார்புடைய (ஜிஎல்சி) நிறுவனங்களிடமிருந்து இந்திய குத்தகையாளர்களுக்கு ‘டெண்டர்கள்’ கிடைக்கப்பெறுவதில்லை என்பதையும் நான் அறிந்துக் கொண்டேன்,” என நஜிப் தமதுரையில் கூறினார்.
மலேசிய இந்தியர்களின் திவால் நிலவரம் குறித்து தாம் பெருமளவில் கவலைக் கொள்வதாகவும், அதனை நிவர்த்தி செய்ய பல தரப்பினருடன் கலந்து பேசியதாகவும் நஜிப் சொன்னார்.
திவாலாகின்ற இந்தியர்களின் பட்டியில் நீண்டுக் கொண்டே போவதை தடுக்கும் பொருட்டு, பேங்க் நெகாரா உள்பட கடன் மற்றும் பொருளாதார நிர்வாகம் குறித்த ஆலோசனைகளை வழங்கும் அமைப்பான ‘எகேபிகே’ (AKPK) ஆகிய இரண்டு நிறுவனங்களும் மலேசிய இந்திய பொருளாதார மாநாட்டு (மஇபொமா) குழுவுடன் இணைந்து, நாடுதளுவிய நிலையில், இது தொடர்பான குறிப்புப் பட்டியலை தயாரிக்கும். திவாலாகும் இந்தியர்களின் நிலைமை, அவர்கள் திவாலாகுவதற்கான முழு காரணத்தை கண்டறிவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதனை தொடர்ந்து, இத்தரப்பினரின் பிரச்சினையை தீர்க்கக் கூடிய வழிகளை வங்கிகளுடன் கலந்து ஆலோசித்து அவர்களின் இந்த நெடுநாள் பிரச்னைக்கு ஒரு தீர்வு காண முடியும் என தாம் நம்புவதாக நஜிப் தெரிவித்தார்.
வங்கிகள் இந்திய வர்த்தகர்களுக்கு கடனுதவி வழங்குவதில் இழுப்பறி செய்வதாகவும், கடனுதவி பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் கொண்டவர்களுக்குக் கூட வங்கிகள் உதவி வழங்குவதில்லை என்ற குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யும் வகையில், இந்திய வர்த்தகர்களுக்கு வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களின் விதி முறைகள் குறித்து முழு ஆலோசனைகளை வழங்க அரசாங்கம் ‘மஇபொமா’அமைப்பின் கீழ் செயலகம் ஒன்றை அமைத்துள்ளதாக நஜிப் சொன்னார்.
இந்த அமைப்பு, அனைத்துலக வாணிப மற்றும் தொழிற்துறை அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் வாணிப ஆலோசனை மையத்தின் உதவியை பெற்றுக் கொள்ளலாம்.
இதனிடையில், இந்தியர்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்திய வணிகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு, அரசாங்கம் வெ. 15 கோடி கடனுதவி ஒதுக்கியுள்ளதாக நஜிப் இந்நிகழ்வில் அறிவித்துள்ளார். 2012 பட்ஜெட்டில் சிறு மற்றும் நடுத்தர வியாபார தொழில்முனைவர்களுக்கு நிதி உதவி வழங்க ஒப்புக் கொண்ட 13 வங்கிகள்தான், இக்கடனுதவியையும் வழங்க முன்வந்துள்ளன. ஒவ்வொரு வங்கியும், தலா வெ. 1 கோடி வழங்க ஒப்புக் கொண்டுள்ளன. எம்ஐடிஎப் (MIDF) நிறுவனம், வெ. 1 கோடி உதவியை ‘எளிய கடன் முறை’யின் கீழ் வழங்க ஒப்புக் கொண்டதாகவும், வெ. 50 லட்சம் கடனுதவியை ‘வியாபார விரைவு திட்டம்’ வழங்கவிருப்பதாகும், மேலும் வெ. 50 லட்சத்தை (ஈ2) திட்ட அடிப்படையில் வழங்கப்படுவதாகவும் நஜிப் சொன்னார்.
அதுமட்டுமல்லாது, தெக்கூன் திட்டத்தின் கீழ், இளைய தொழில்முனைவர்களுக்கு, வெ. 3 கோடி கடனுதவி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தமாக ஒதுக்கப்பட்டுள்ள வெ. 18 கோடி நிதியைக் கொண்டு இந்திய தொழில்முனைவர்கள், வியாபாரிகள், வர்த்தகர்களின் பொருளாதாரம் வலுப்பெறும் என அரசாங்கம் நம்புவதாக நஜிப் கூறினார்.
இந்திய குத்தகையாளர்களுக்கு, அரசாங்கம் மற்றும் அரசு சார்புடைய நிறுவனங்கள் வாய்ப்புகள் தருவதில்லை என்ற குறைபாடு பரவலாகி வருகிறது. அரசாங்கம் மற்றும் அரசு சார்புடைய நிறுவனங்கள், ‘டெண்டர்’ வாய்ப்புகளை எவ்வகையில் கையாளுகின்றன என்பதை முதலில் அவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். தரமான பணியை வழங்கும் குத்தகையாளர்களுக்கே இந்த ‘டெண்டர்’கள் வழங்கப்படுகின்றன. அரசாங்கத்தின் விதிமுறைகளை அடையக்கூடிய தகுதியை எவ்வகையில் இந்திய குத்தகையாளர்கள் பெற இயலும் என்ற ஆலோசனையை வழங்க ‘மஇபொமா’ அமைப்பின் செயலகம் உறுதுணை அளிக்கும்.
கஸானா நேஷனல் மற்றும் பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட் (பிஎன்பி) நிறுவனங்கள், ‘மஇபொமா’ செயலகத்துடன் இணைந்து, இந்திய குத்தகையாளர்களுக்கு, அரசாங்க மற்றும் அரசு சார்புடைய நிறுவனங்களின் ‘டெண்டர்கள்’ கிடைக்க உதவி புரியும் என நஜிப் தெரிவித்துக் கொண்டார்.
அறிவிக்கப்பட்ட இந்த திட்டங்கள் யாவும் 6 மாதத்திற்குள் அமல்படுத்தப்படும் என நஜிப் கூறினார். இந்திய மக்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக இத்திட்டங்கள் வரையப்பட்டுள்ளன. அரசாங்கம் இந்தியர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்பது இதன் வாயிலாக மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மூலம்:http://tamil.nambikei.com/?p=440#more-440

No comments:

Post a Comment

How to keep your employees respectful