Wednesday, August 3, 2011

பதவிக்காக போராடும் அரசியல்வாதிகள் தேவையில்லை சேவையை செய்யும் தொண்டனைத்தான் மக்கள் எதிர்பார்கிறார்கள்.

மலேசிய இந்திய இளைஞர்கள் புத்தாக சிந்தனைகளையும்  ஆரோக்கியமான போட்டி உணர்வுமிக்க இளைஞர்களாகவும் திகல வேண்டும். சிறும்பான்மை இனத்தவர் என்ற எண்ணம் நீங்கி நாமும் சமுதய வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூகவியல் போன்ற துறைகளில் மற்ற இனத்தவர்களுக்கு ஈடாக பயணம் செய்ய வேண்டும், இல்லை என்றால் நாட்டின் துரித வளர்ச்சி நீரோட்ட்த்தில் நாம் மூழ்கடிக்கப்படுவோம். ஒற்றுமை என்ற மந்திரத்தை மறந்த்ததால் இன்று பல கூருகளாக பிரிக்கபட்டுள்ளோம் என்பதே உண்மை. மலேசிய அரசியல் வரலற்றில் காளான்ளைப்போல் எத்தனையோ கட்சிகள் இருந்தும் நம் சமுதாயம் மூச்சு திணரிக்கொண்டுதான் இருக்கின்றது. தினம் ஒரு அரசியல் கட்சி பெய்த மழையில் பூத்த காளான் பொல பூத்துக்கொண்டுதான் இருக்கின்றது இதனால் சமுதயத்திற்கு என்ன பயன் என்பது கேள்விக்குறியே. தனி மரம் தோப்பாகது என்பதை ஏன் உணர மறுக்கிறார்கள் என்பது தான் புரியாத புதிராக இருக்கின்றது. நோக்கம் ஒன்றாக இருக்கையில் எதற்று பாதைகள் மற்றும் பல கோடி உள்ளது. சமுதாய வளர்ச்சிக்கு பாடுபடுவதே அனைத்து கட்சிகளின் தலையாய நோக்கமாக இருக்கையில் எதற்கு இத்தனை களங்கல் என்பது புரியவில்லை அனைவரும் தலைவனாக விரும்பினால் யார்தான் தொண்டனாக சேவை செய்வது. தலைவன் என்பவன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் சீமானாக இருந்த்து அந்தக்காலம், இப்பொழுது காலம் மறுகிறது, தலைவனும் சேவகணாக வேண்டும் என்பதெ இன்றய உலக நீதி. 2 லட்சம் மக்கள் தொகையை கொண்ட நம் சமுதாயத்தை கூறு போட 200 அரசியல் கட்சிகள் தேவை தானா? அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்றினைந்தால் அனு சக்தியை விட அல்லவா வேகம் கிடைக்கும். அரசியல் இன்று வியாபார சந்தையாகி விட்ட்து போல் ஆயிற்று. பணம் படைத்தவன் பலவான் ஆகவும்; பாமரன் பரதேசியாகவும் இருக்கும் அவலம் இன்றும் அல்லவா தொட்ர்கிறது. (அனைவரையும் குறிப்பிடவில்லை) இக்காலத்து இளைஞர்கள் தலைவர்களுடன் நேரடி தொடர்பையே (PERSONAL TOUCH)விரும்புகின்றனர், ஆனால் எத்தனை தலைவர்கள் அடிமட்ட உருப்பினர்களை சந்தித்து பிரச்சனைகளை கேட்டுள்ளார்காள், தெளிந்த சிந்தனையும் சீர்மிகு நெறிகளையும் கொண்டுள்ள தலைவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மாற்றம் ஒன்றே நிரந்த்தரம் காலத்திற்கேற்ப நாம் மாறா விட்டால் அது நம்மை மாற்றி விடும், எனது ஒரே கணவு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்தபுரிந்துணர்வோடு ஒரெ குடையின் கீழ் இணைந்து தனி ஒருவர் பிரச்சனைக்கு குறல் கொடுக்காமல் ஒட்டுமொத்த சமுதாயத்தின் தேடலுக்கும், வெற்றிக்கும் பாடுபட வேண்டும் என்பதே.சமுத்திரம் கடப்போம்சரித்திரம் படைப்போம்.


~இந்திய சமுதாயத்தின் விடியலை நோக்கி கண் விழித்திருக்கும் மண்ணின் மைந்தன்~


T.SIVANESAN
INDIAN BLOGGER’S
NESAN3.BLOGSPOT.COM
nesansivanesan@yahoo.com

No comments:

Post a Comment

How to keep your employees respectful