Monday, December 29, 2014

புத்தாண்டே வருக புது தெம்பைத்தருக!





2014 ஆம் ஆண்டு நமக்கு மட்டும் அல்ல உலக நாடுகளையே உலுக்கி ஆட்டிய பல கசப்பான  நினைவுகளை விட்டு சென்றுள்ளது. குறிப்பாக நமது மலை நாட்டிற்கு பெறுத்த தாக்கத்தையும் சேதத்தை விட்டு சென்றுள்ளது. இருந்த போதிலும் மலேசியர்களுக்கே உண்டான மனத் திடமும் உறுதியும் அதில் இருந்து மீண்டு வர பல வழிகளில் போராடி வந்துள்ளனர் இன்னும் போராடிக்கொண்டுள்ளனர். 

யார் கண்ணாரு பட்டதோ , வெந்த புண்ணில் வேல் பாஞ்சியது போல ஒன்றின் பின் ஒன்றாக நம்மை வந்து தாக்க அதை திடமாக எதிர் கொள்ளும் பலத்தை இறைவனிடம் பெற்று இணையாக ஈடு கொடுத்து வருகின்றோம். ஒற்றுமையும் ஒருமைப்பாடும் நிறைந்த சமூதாயத்தை உருவாக்க அனைத்து மலேசியர்களும் இன மத பேதம் இன்றி ஒரே குடையின் கீழ் இணைந்து செயல் பட இறைவன் தந்த வாய்ப்பாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அரசியல் ரீதியில் நாம் அனைவருமே எதோ ஒர் இடத்தில் வலு இழந்து தான் கிடக்கின்றோம். நடந்தது நடந்ததாகவே இருக்க நடக்க இருப்பதை முன்னோக்கி சிந்தித்து செயல் பட துவங்க வேண்டும். கல்வி பொருளாதாரம் சொத்துடைமை என எத்தனையோ முக்கிய கூறுகளில் நாம் சிறந்து விளங்கிய பொற்காலங்கள் திரும்ப வேண்டும்.

2015 ஆம் ஆண்டு நமது சமுதாயத்தின் விடிவு காலமாகவும் அடுத்த தலைமுறையின் முன்னேற்ற படிகளாகவும் பயன் பட வேண்டும். முன்னேற்றத்தை ஒன்றை முதன்மையாக கொண்டு செயல் பட தொடங்குவோம். பிறக்க இருக்கும் 2015 ஆம் ஆண்டு அனைவருக்கும் சிறந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment