
முன்னாள் குடியரசு தலைவர் ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் பிறந்த நாள்...
ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) என அழைக்கப்படும் ஆவுல் பகீர் ஜெனுலாபுதீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) (பிறப்பு - அக்டோபர் 15, 1931, ராமேஸ்வரம்) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார்.இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியியலாளரும் ஆவார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
இவர் 11-வது இந்தியக் குடியரசுத் தலைவராவார். இவரது பணிக் காலம் 2002-2007 ஆகும். இவர்"இந்தியாவின் ஏவுகணை மனிதன்" என்றும் அழைக்கப்படுகிறா ர். இந்தியாவின்எறிக ணைகள் வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் வான் எரிசுகள் வடிவமைப்பு, உருவாக்கம் ஆகியவற்றில் இவரின் பங்களிப்பு கருதியே அப்பெயர் பெற்றார். இந்தியாவின் இரண்டாவது அணு ஆயுத சோதனையான பொக்ரான்-II (1998) சோதனையில் முக்கியப் பங்கு வகித்தார். முதல் அணு ஆயுத சோதனை 1974-ல் நடத்தப்பட்டது.
இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கழ கத்தின்(திருவனந்தபுரம் ,கேரளா) வேந்தராகவும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும , மைசூர் பல்கலைக்கழத்தில் வருகைப் பேராசிரியராகவும் இருந்து வருகிறார். மேலும் பல இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியர் போன்ற சிறப்பு நிலைகளில் உள்ளார்.
அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தாய் மொழி தமிழ். அவருடைய தந்தை இந்து மதத்தின் தலைவர்களிடமும், பள்ளி ஆசிரியர்களிடமும ் மிகுந்த அன்புகொண்டிருந் தார். அப்துல் கலாம் தன்னுடைய சுயசரிதையில் தன் படிப்புச் செலவுகளுக்காக நாளிதழ்களை விற்றதாக குறிப்பிட்டுள்ள ார். கலாம் பிறந்த வீடு தற்போதும் ராமேஸ்வரத்தில் உள்ள மசூதி தெருவில் காணமுடிகின்றது. இந்த ஊருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த வீட்டுக்கு வந்து பார்த்துச் செல்கின்றனர். கலாம் இயற்கையோடு வாழ்ந்தவர். 1964ஆம்ஆண்டு ஒரு சூறாவளிக் காற்று பாம்பன் பாலத்தையும் அதன் மேலே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஒரு ரயிலையும் கலாமின் சொந்த ஊரான தனுஷ்கோடியையும் இழுத்துச்சென்றதே. தண்ணீர் என்பது அழிக்கும் தன்மை வாய்ந்தது என்று அவர் எண்ணிக் கூடப் பார்த்ததில்லை என்று அவருடைய சுயசரிதையான அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுளளார்.....
No comments:
Post a Comment