Friday, January 27, 2012

நமது பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் அவர்களின் சீர்மிகு சிந்தனையில் உதிக்க விருக்கும் 6 தமிழ் பள்ளிகள் இந்திய சமுதாயத்தின் வருங்கால முன்னேற்றம் மறைந்திருகின்றது.


சமுதாய தலைவர்கள், என்றும் ஒன்று பட்டு ஒற்றுமையாக ஒரே குடையின் கீழ் இணைந்து செயல் பட வேண்டும். நமது பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் அவர்களின் சீர்மிகு சிந்தனையில் உதிக்க விருக்கும் 6 தமிழ் பள்ளிகள் இந்திய சமுதாயத்தின் வருங்கால முன்னேற்றம் மறைந்திருகின்றது. கல்வி ஒன்றே நமது சமுதாயத்தின் ஒளி விளக்கு. கல்வி கற்ற சமுதாயமாக உருவெடுக்க தமிழ் பள்ளிகள் உயரிய பங்கை அளித்து வருகின்றது என்று தைரியமாக கூறலாம். கடந்த காலங்களில் பார்க்கும் பொழுது தமிழ் பள்ளிகளில் படித்து பல்கலைகழகம் நுழைந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளாத்து.  அந்த வகையில் நம் பிரதமர் அறிவித்த  புதிய 6 தமிழ் பள்ளிகளுக்கான உரிமம் அவர் நம் சமுதாயத்தின் மீது வைத்துள்ள அன்பையும் நம்பிக்கையையும் குறிக்கின்றது. மேலும் நாட்டில் தமிழ் பள்ளிகளின் அடையாளம் அழியாமல் இருப்பதற்கும் மற்றும் நமது தாய் மொழி பள்ளியின் நோக்கம் தொடர்ந்து முன்னேற்றம் காண  “தமிழ் பள்ளி ஆய்வு வாரியம்”  ஒவ்வொரு தமிழ் பள்ளியிலும் அமைய வேண்டும் என்பது இன்றைய சூழலுக்கு அவசியமாகிறது. அந்த வகையில் பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ் பள்ளிகளின் தற்போதைய நிலையை பற்றி ஆய்வு மேற்கொள்ள ஒரு சிறப்பு வாரியம் அமைக்கப்பட வேண்டும். ஒரே மலேசியா என்ற கொள்கையின் கீழ் நமக்கும் சம சீரன வாய்ப்புகளும் உரிமைகளும் கிடைக்க பெருகின்றோம் என்பது பிரதமரின் அறிவிப்பின் மூலம் சான்றாகின்றது. இந்த முடிவுக்கு மதிப்பளித்து அமலாக்கத்திலும் சரியான முறையில்  நடைபெறுவதை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட வேண்டும். சரித்திரம் படைக்க சமுத்திரம் கடந்த இனத்தின் குரலுக்கு செவி சாய்க்கும் பிரதமருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன், இந்நிலை தொடர அவருக்கு எனது ஆதரவையையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

No comments:

Post a Comment

How to keep your employees respectful