THE EDGE ( COMMON SENSE)
THE REAL TALK
Tuesday, October 12, 2010
ராகா ஆஸ்ட்ரோ விருதளிப்பு விழா 2010
12-10-2010 (22:01:01)
- அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ராகா ஆஸ்ட்ரோ விருதளிப்பு விழா 2010 தலைநகரில் மிகவும் பிரசித்திப் பெற்ற புக்கிட் ஜாலில் புத்ரா அரங்கத்தில் (Stadium Putra, Bukit Jalil) மாலை 7.30க்கு அமோக ஏற்பாடுகளுடன் அரங்கேறியது. மேலும், இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி, பலதரப்பட்ட இசை படைப்புகளுடனும், கண்கவர் நடனங்களுடனும் பார்ப்பவர் அனைவரையும் அசரவைக்கும் வகையில் நம் நாட்டின் சிறந்த இந்திய கலைஞர்களுக்கு மகுடம் சூட்டியது என்றுதான் கூற வேண்டும். இதில் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, பாடகர் விஜய் பிரகாஷ், பாடகி நேஹா பாசின் மற்றும் நம் மலேசியக் கலைஞர்களான பாலன் கேஷ்மீர் மற்றும் சாஷ்தன் அத்தோடு டி.எச்.ஆர் ராகா அறிவிப்பாளர்களும் மற்றும் வானவில் படைப்பாளர்களும் ஒரு சிறப்பான நிகழ்ச்சியினைப் படைத்தனர் என்றுதான் கூறவேண்டும்.
இந்த வருடம் டி.எச்.ஆர். ராகாவும் (THR Raaga), ஆஸ்ட்ரோ வானவில்லும்(Astro Vaanavil) இணைந்து மெக்னம்(Magnum) மற்றும் டியூன் டோ க் மொபைல் பிரிபேட்(Tune Talk Mobile Prepaid) நிறுவனங்களின் பேராதரவுடன் இந்த மேம்படுத்தப்பட்ட ராகா ஆஸ்ட்ரோ விருதளிப்பு விழா 2010ஒ நிகழ்ச்சியை வழங்கினர். கலைத்துறையில் ஈடுபட்டிருக்கும் நம் மலேசியக் கலைஞர்களை அடையாளம் கண்டு திறமை வாய்ந்த, சிறந்த கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் இவ்வருடம் இந்த விருதுவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராகா ஆஸ்ட்ரோ விருதளிப்பு விழா 2010 கலைஞர்களுக்கு ஒரு சிறந்த களமாக அமைந்தது.
மெக்னம் நிறுவனத்தின் விற்பனைத்துறை அதிகாரியான, திருமதி சூசன் சூ குறிப்பிட்டதாவது, ஓநமக்கும், நம் அன்புக்குரியவர்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை அமைத்துத்தர கல்வி மிக மிக முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த அடிப்படையில் சிறந்த கல்வியைப் பெற பாலர் பள்ளி மிக முக்கியம் என்பதால், இந்த வருடம் பாலர் பள்ளிகள் அமைப்பதில் கவனம் செலுத்தவிருக்கிறோம். பெரும்பாலான வசதி குறைந்தவர்கள் தங்கள் வருமையின் காரணமாக அவர்களது குழந்தைகளைப் பாலர் பள்ளிக்கு அனுப்பவதில்லை. அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பு. எனவேதான் இந்த வருடம் பாலர் பள்ளிகள் அமைப்பதற்காக நிதி திரட்டும் சேவையில் இறங்கியுள்ளோம். இந்த நல்ல எண்ணத்திற்காக பொதுமக்கள் அனைவரும் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கியதற்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஔ என்று கூறினார்.
Tune Talk Mobile Prepaid தலைமை நிர்வாக அதிகாரி ஜேசன் லோ அவர்கள், ஓஒரே மலேசியக் கொள்கையின் அடிப்படையில் கலைஞர்களின் மேம்பாட்டிற்கு ஓராகா ஆஸ்ட்ரோ விருதளிப்பு விழா 2010ஔ க்கு ஆதரவு வழங்குவதில் நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம். சிறந்த மலேசியக் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் இந்த மாபெரும் நிகழ்வில் எங்களது வாடிக்கையாளர்கள், ரசிகர்கள் அனைவரும் கைகோர்த்தமைக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்ஔ எனக் குறிப்பிட்டார்.
டி.எச்.ஆர். ராகாவின் தலைமை நிர்வாகியான, திரு. ரமேஷ் பெரியசாமி கூறுகையில், ஓராகா ஆஸ்ட்ரோ விருதளிப்பு விழா 2010ஔ நிகழ்ச்சியை எண்ணி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். பிரசித்திப் பெற்ற ஒரே கலைஞர்கள் விருது என்ற அடிப்படையில், இந்த வருடம் அதன் விருதுகளையும், தரத்தையும் மேலும் அதிகரித்தது டி.எச்.ஆர் ராகாவின் மிகச் சிறந்த முயற்சி என்றுதான் கூற வேண்டும். நாட்டில் உள்ள சிறந்த மீடியாக்களில் ஒன்றான வானொலியும், தொலைக்காட்சியும் இணைந்து ஏற்பாடு செய்த ஓராகா ஆஸ்ட்ரோ விருதளிப்பு விழா 2010ஔ இசை, மற்றும் நடிப்புத் துறையில் உள்ள அனைத்து கலைஞர்களுக்கும் சிறந்த அங்கீகாரமாக அமைந்துள்ளது. உல்லாசமாக விருது விழாவை ஏற்பாடு செய்யும் அதே வேளையில், தமிழ்ப்பள்ளிகளுக்கு பாலர் பள்ளிகள் அமைத்துத்தர நிதி திரட்டும் எங்களின் முக்கிய நோக்கத்தை நாங்கள் என்றுமே மறக்கவில்லை. உல்லாசமும், சமுதாய சிந்தனையும் ஒன்றிணைய கலைஞர்களுக்கு சிறந்த அங்கீகாரமும் கிடைக்கிறது. எனவே, இந்த உயரிய நோக்கத்தில் அனைவரும் என்றென்றும் கைகோர்ப்போம். இறுதியாக, எங்களின் இந்தத் திட்டத்திற்கு உதவிக்கரம் புரிந்த ரசிகர்களாகிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றயினையும் அத்தோடு விருதுபெற்ற அனைத்து வெற்றியாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.ஔ என்றார்.
ஆஸ்ட்ரோ நிகழ்ச்சிகள் குழும இயக்குநர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து அவர்கள், உள்ளூர்க் கலைஞர்களின் மேம்பாட்டில் எங்களுக்கு எப்பொழுதுமே அக்கறை உண்டு. எனவேதான் பல்வேறு போட்டிகளையும், நிகழ்ச்சிகளையும் நடத்தி அவர்களுக்கு நிறைய வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளோம். தொலைக்காட்சியும், வானொலியும் இணைந்து ஏற்பாடு செய்யும் இந்த விருதுவிழா மலேசிய இந்தியக் கலைஞர்களின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும் என்று எதிர்ப்பார்க்கிறோம். இதேவேளையில் ஓராகா ஆஸ்ட்ரோ விருதளிப்பு விழா 2010ஔ நிகழ்ச்சியில் வெற்றிப்பெற்ற அனைத்து வெற்றியாளர்களுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!ஔ என்று கூறினார்.
நேயர்களின் வாக்களிப்பே முக்கியமானது!
அவ்வகையில், முதல் சுற்று வாக்குப்பதிவு 15-ஆம் தேதி ஆகஸ்ட்-இல் நடைபெற்று முடிந்தது. வானொலியின் இசை மற்றும் பாடல் அடிப்படையில் மொத்தம் 6 விருதுகள் பிரிவும், தொலைக்காட்சியின் கலைத்துறை அடிப்படையில் 7 விருதுகள் பிரிவும் இந்த முதல் சுற்று வாக்குப்பதிவில் உள்ளடங்கியதாகும். இந்த முதல் சுற்று அங்கத்தில் நேயர்கள் குறுஞ்செய்தி மூலமாகவும் மற்றும் இணையதள மூலமாகவும் தங்களுடைய வாக்குகளை அனுப்பினர். அவ்வாக்குகளின் அடிப்படையில், அத்துனை 13 பிரிவிற்கும், ஒவ்வொன்றிலும் 5 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டாம் சுற்று வாக்குப் பதிவுக்கு அதாவது இறுதி சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளனர்.
அந்த 13 பிரிவுகளும் முறையே பிரபலமான இசைக்கலைஞர், பிரபலமான இசை ஆல்பம், பிரபலமான இசைக்குழு, பிரபலமான பாடல், பிரபலமான இசையமைப்பாளர் பிரபலமான பாடலாசிரியர், பிரபலமான ஆண் படைப்பாளர், பிரபலமான பெண் படைப்பாளர், பிரபலமான தொலைக்காட்சி படம், பிரபலமான நடிகை, பிரபலமான நடிகர், பிரபலமான இயக்குநர், பிரபலமான பாடல் காட்சியமைப்பு ஆகும்.
இந்த இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு வாக்களிக்கும் அங்கம் அண்மையில் 4-ஆம் தேதி அக்டோ பர் மாதம் முடிவடைந்தது. இந்த விருதளிப்பு விழாவில், ஒவ்வொரு 13 பிரிவிற்கும் கடைசி ஐந்து சிறந்த கலைஞர்களைத் தேர்வு செய்யும் முறை, பொது மக்கள் அனுப்பிய குறுஞ்செய்தியின்(எஸ்.எம்.எஸ்) எண்ணிக்கையைப் பொருட்டே தேர்வுசெய்யப்பட்டவையாகும். இந்த வாக்குப்பதிவுகளை கணக்கெடும் பெரும் பங்கினை, ஓரு நிபுணத்துவம்வாய்ந்த கணக்கெடுப்பு நிறுவனம் அமர்த்தப்பட்டது. இவர்களின் முடிவே இறுதியானதாகும்!
ராகா ஆஸ்ட்ரோ விருதுகள் 2010 கலைநிகழ்ச்சிகள்.
இம்மாபெரும் விருதளிப்பு விழாவை முன்னிட்டு, மெக்னம் நிறுவனத்தார், டியூன் டோ க் மொபைல் பிரிபேட் நிறுவனத்தார், THR ராகா மற்றும் ஆஸ்ட்ரோ வானவில் இணைந்து நாட்டின் முக்கிய நகரங்களை அதிரடியான கலைநிகழ்ச்சிகளால் கலக்கினர் என்பது நீங்கள் அறிந்ததே. இந்நிகழ்ச்சிகளில் இறுதி சுற்றுக்குத் தகுதிபெற்ற மலேசியக் கலைஞர்களும், டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்களும் பொதுமக்களை மகிழ்வித்தனர். மேலும் விருதுவிழா ஏற்பாடுச் செய்யப்பட்டதன் சிறந்த நோக்கத்திற்காக பொதுமக்கள் தங்களுடைய நன்கொடைகளைச் செலுத்த ஊக்குவிக்கும்ம் பொருட்டும், கீழ்க்கண்ட இக்கலை நிகழ்ச்சிகள் ஏதுவாக அமைந்தன.
Times Square, Penang 24th July 2010
Sutra Mall, Johor 4th September 2010
Seremban Parade, Seremban 25th September 2010
பிரமாண்ட விழாவில் சமுதாய முன்னேற்றத்திற்கு ஓர் ஓடுபாதை.
ராகா ஆஸ்ட்ரோ விருதளிப்பு விழா 2010ஒ நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க, நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட ரி.ம 10, பணம் முழுவதும் 100 விழுக்காடு தமிழ்ப் பாலர் பள்ளிகள் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டது. இந்த தமிழ்ப் பாலர் பள்ளிகள் அமைப்பதற்கு, சி.சி.ஐ எனப்படும் அரசாங்க சார்பற்ற இயக்கத்தின் உதவியுடன், தமிழ்ப் பாலர் பள்ளிகளே இல்லாத, மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள தமிழ்ப்பள்ளிகளை நேரடியாக சென்று, அனைத்தையும் நன்கு ஆராய்ந்த பின்னரே, குறிப்பிட்ட மூன்று தமிழ்ப்பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவை:
1. Sekolah Jenis Kebangsaan (Tamil) Permas Jaya, Johor
2. Sekolah Jenis Kebangsaan (Tamil) Ladang Sungai Tukang, Kedah
3. Sekolah Jenis Kebangsaan (Tamil) Ladang Pyre, Penang
ராகா ஆஸ்ட்ரோ விருதளிப்பு விழாவில் திரட்டப்படும் நன்கொடைகள் கூடுதலாக கிடைக்கப்பெற்றால், மேலும் கூடுதல் தமிழ்ப் பாலர் பள்ளிகள் அமைப்பதற்கு இந்நிகழ்ச்சி வழிவகுக்கும். ஆக, பொது மக்கள் நிதியுதவி செய்ய விரும்பினால், இந்த சேவைக்கென்றே ஒதுக்கப்பட்ட, Raaga Astro Awards (Public Bank: 3154827627) என்ற வங்கிக்கணக்கில் தங்கள் நன்கொடைகளைச் செலுத்தலாம். மேலும் அதிக நிதி திரட்டும் எண்ணத்தில் கூடுதல் விலையில் அதாவது 150 ரிங்கிட் மற்றும் 300 ரிங்கிட் மதிப்பில் வி.ஐ.பி (VIP) இருக்கைகளும் இந்நிகழ்ச்சிக்காக விற்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கேளிக்கையும் நன்கொடைக்கு சமர்ப்பணம்!
ராகா ஆஸ்ட்ரோ விருதளிப்பை முன்னிட்டு, அன்றைய தினம் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை, புத்ரா அரங்கத்தின் வெளியே ஒரு கேளிக்கை நிகழ்ச்சியும் (Carnival) நேயர்களுக்காக நடைபெற்றது. அக்கேளிக்கை நிகழ்ச்சியில் சில விற்பனை முகப்பிடங்கள் (booths) வாடகைக்கு விடப்பட்டன. இந்த விற்பனையில் கிடைக்கப்பெற்ற நிதி அனைத்துமே தமிழ்ப் பாலர் பள்ளிகள் அமைப்பதற்கு பயன்படுத்தப்படும்.
இந்த ராகா ஆஸ்ட்ரோ விருதளிப்பு விழா 2010 நிகழ்ச்சி ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201-இல் நேரடி ஒளிபரப்பாகவும் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
How to keep your employees respectful
Senarai Syarikat Yang Menawarkan Tempat Untuk Latihan Industri
Senarai Syarikat Yang Menawarkan Tempat Untuk Latihan Industri Bil Organisasi Telefon/Fax/Email Pegawai dihubungi...
TAK FAHAM BAHASA!!! BALIK RUMAH LA!! JANGAN JADI GANGSTER....
SELEPAS 52 TAHUN NEGARA KITA MERDEKA...SUDAH 13 KALI KITA BERDEPAN DENGAN PILIHAN RAYA DAN JUGA BEBERAPA BY ELECTION DI SELURUH NEGARA...ADE...
Workplace Harassment: What Should Employers Do?
workplace's environment may sometimes becomes "unhealthy" when harassment occurs. However, what can be considered harassment i...
No comments:
Post a Comment