Thursday, January 24, 2013

கந்தசாமி|||சமய விழாவை வியாபாரம் ஆக்காதீர்கள்!!



தைப்பூச திருவிழாவில் முருகனுக்கு நேர்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் ரி.ம 5 வெள்ளியை செலுத்தி பாலை வாங்க வேண்டும் அப்படி 5 வெள்ளி கூட இல்லாத்வர்கள் பாலை முருகனுக்கு அபிஷேகம் செய்யாமல் வேறு எங்காவது ஊற்றட்டும் என்று தேவஸ்தான தலைவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார் எனும் செய்தியை மலேசிய தமிழ் நாளேடு ஒன்றில் படித்தேன் (மக்கள் ஓசை). அச்செய்தி மலேசிய இந்துக்களின் மனதை இழிவுப்படுத்தும் வகையிலும் தமிழ்க்கடவுள் முருகபெருமானின் பக்தர்களை புண்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
மக்களை ஒன்றினைத்து சமய கூறுகளை கற்றுக்கொடுக்க வேண்டிய ஸ்தானத்தில் இருக்கும் ஒருவர் வியாபாரம் பேசுவது வழிப்பாட்டு தளங்கள் இன்று வியாபாரத்தளங்களாக மாறி விட்டன எனும் எண்ணத்தை தூண்டுவதாக தோன்றுகிறது.. 
நேர்த்திக்கடன் என்பது பக்தர்களின் தனிப்பட்ட ஒரு செயலாகும், தைபூசத்தன்று பக்தர்கள் காவடி,பால் குடம் எடுத்து தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவது நாம் அறிந்த்த ஒன்றே. இறைவனுக்கே விலை நிர்னயம் செய்ய நடராஜா யார்?
மலேசிய இந்து சங்கம் காலங்காலமாக அடக்கமாகவும் அமைதியாகவும் இருப்பதை எண்ணி வேதனை படுகிறேன். இந்து சமய வளர்ச்சிக்கு பாடுபட வேண்டியவர்கள் எல்லாம் கல்லா பெட்டிக்கு கணக்கு கேட்கின்ற கேவலமான நிலை நம் சமயத்திற்கும் சமுதாயத்திற்கும் ஒரு சாப கேட்டை ஏற்படுத்தி விட்டது. சிந்து நதியில் தோன்றிய மூத்த சமயம் இன்று நாதியற்று கிடக்கின்றது. – இனியவன்

No comments:

Post a Comment

How to keep your employees respectful